மலேசிய பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு

சிதம்பரம், ஜூலை 25: அண்ணாமலை பல்கலைக்கழகம் மலேசிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் மலேசிய நாட்டு மாஹச பல்கலைக் கழகமும், மருந்தாக் கவியல் துறை, மருத்துவப் புலம் மற்றும் பல துறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி, மாணவர்கள் பரிமாற்றம் போன்ற நிலைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் மற்றும் மாஹச பல்கலைக்கழக மருந்தாக்கவியல் வெற்றிவேல் சுப்பிரமணியன், முன்னாள் மாணவர், மருந்தாக்கவியல் துறை ஆகியோரிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ புல முதல்வர் ராஜ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் .மோகந்தா, .மன்னா,.தனபால், தேசிய மற்றும் பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன் மற்றும் முன்னாள் மாணவர்களின் சங்க இயக்குநர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.