பாட்னா, ஜூலை 26: அசாம், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. அசாம், பீகார், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கூடுதலாக நேபாளத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ராணுவமும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். எனினும் இரு மாநிலங்களிலும் சேர்த்து மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.