முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது

சென்னை

சென்னை, ஜூலை 26: முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை தலாக் எனக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

முன்னதாக பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தப்பட முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு முன்பு பிணையில் வெளிவரும் வகையில் மசோதாவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிணையில் வெளிவர இயலாத குற்றம் என்றால், காவல் நிலையத்தில் பிணை வழங்க முடியாது. பிணையில் வெளிவரக் கூடிய வழக்கு என்றால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.

இதேபோல் ஆர்டிஐ சட்ட திருத்தம் மசோதாவும் நேற்று மக்களவையில் நிறைவேறியது. இந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்தலாக் சட்ட மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்து பேசினார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.