உமாமகேஸ்வரி குடும்பத்துக்கு கனிமொழி ஆறுதல்

தமிழ்நாடு

நெல்லை, ஜூலை 27: நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டுக்கு சென்ற திமுக எம்.பி கனிமொழி, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.திமுக எம்.பி கனிமொழி இன்று நெல்லை சென்றார். முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டுக்கு சென்ற அவர், உமா மகேஸ்வரி, முருக சங்கரன் ஆகியோரது படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. படுகொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என தெரியவில்லை.

நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் கருத்தை கேட்காமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது மோசமான செயல் என தெரிவித்தார். மேலும் உமா மகேஸ்வரி படுகொலையில் தொடர்பு உடையவர்களை உடனே கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்பி கேட்டு கொண்டார்.