தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

சென்னை

சென்னை, ஜூலை 27: பெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சிந்தாதறிப்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர், தரமணி எம்.ஜி.ஆர். சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். நேற்றிரவு வழக்கம்போல் பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

நள்ளிரவு 1.15 மணியளவில் பெருங்குடி ராஜீவ்காந்தி சாலை சர்வீஸ் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு பைக்கில் ஊர்க்காவல் படை வீரரான தரமணியை சேர்ந்த தனசேகர் (வயது 29) ஏடிஎம் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார்.
ராஜசேகர் அதிவேகத்தில் வந்ததை பார்த்தவுடன், தனசேகர் அப்படியே வண்டியை நிறுத்திவிட்டுள்ளார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த ராஜசேகர், தனசேகரின் பைக் மீது மோதியதில், தூக்கிவீசப்பட்டு சாலை தடுப்பில் மோதி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஹெல்மெட் வைத்திருந்தும் தலையில் அணியாமல் அதை வாகனத்தில் வைத்துவிட்டதுடன், அதிவேகத்தில் வந்ததே ராஜசேகரின் உயிரிழப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.