காஞ்சிபுரம், ஜூலை 28: அத்தி வரதரை தரிசிக்க இன்று 5 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர். அத்தி வரதர் இளம் நீலப்பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 27 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இதுவரை ஏறத்தாழ 38 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

28-ம் நாளான இன்று ஏகாதசி மற்றும் ஞாயிறு கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தி வரதர் இளம் நீல நிற பட்டாடை உடுத்தி வண்ண வண்ண மலர்களால் பூமாலை செண்பகப் பூ மாலை உள்ளிட்டவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று 27-ம் நாள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 27 நாட்களில் 38 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட தூரத்தில் 5 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.