காஞ்சிபுரம், ஜூலை 29: 29-ம் நாள் இன்று ஆதி அத்திவரதர் ஆரஞ்சு வண்ண பட்டாடையில், மல்லிகை, மகிழம்பூ மற்றும் பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சூடப்பட்டு, முத்து மணி கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.
காஞ்சி நகரமே பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுவதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் பக்தர்கள் கூறி வருகின்றனர்.
ஆதி அத்தி வரதர் வரும் 17ம்தேதிவரை தரிசனம் கொடுப்பதால் அவரை காண நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் காஞ்சி நகரமே திணறி வருகிறது.
29ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பெருமாளை எழுப்பும் வைபவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.
ஆதி அத்திவரதருக்கு ஆரஞ்சு வண்ணத்தில் பட்டாடை அணிவிக்கப்பட்டு, அவரது கழுத்தில் மல்லிகை, ரோஜா, செண்பகம் உள்ளிட்ட பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டும் அவரது கையில் மணம் தரும் மகிழம்பூ சாற்றப்பட்டு, முத்து மணி கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
ஆகஸ்ட் 17-ம்தேதி வரை அத்திவரதர் காட்சி அளிப்பதால் பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு, மற்றும்அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.