சென்னை, ஜூலை 29: திருச்சி விமான நிலையத்தில் 11 பயணிகளிடமிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை வந்த, ஏர்ஆசியா மற்றும் மலிண்டோ விமானங்களில் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் திருச்சி, சென்னை, மதுரை, நெல்லையை சேர்ந்த 11 பேரிடமிருந்து தங்க செயின்கள், தங்ககட்டிகள் என 90 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.