சென்னை, ஜூலை 29: குன்றத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர்ச்சியாக கைவரிசை காட்டிவந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் 2-ம் கட்டளையை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 48). இவர், கடந்த 20-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த 3.5 சவரன் நகை உள்ளிட்டவை காணாமல் போயுள்ளது. இது குறித்த புகாரின்பேரில், குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி முருகன் (வயது 36), செல்வம் (வயது 32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஓட்டேரியை சேர்ந்த இவர்கள் இருவரும் குன்றத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக கைவரிசை காட்டியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆட்டோ, 3.5 சவரன் நகை, அரைகிலோ வெள்ளி, ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.