திருத்தணி ஜூலை 29: திருத்தணி பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 1034 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை திருத்தணி எம்எல்ஏ பிஎம்.நரசிம்மன் வழங்கினார். திருத்தணி பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையில்உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருத்தணி மாவட்டம் கல்வி அதிகாரி பழனிசேகர்பங்கேற்று தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1034 பள்ளி மாணவமாணவிளுக்கு மடிக்கணிகளை எம்எல்ஏ பிஎம் நரசிம்மன் வழங்கினார். அப்போது அவர “பேசும்போது இந்த ஆண்டு 1300 கோடி செலவில் மாணவ மாணவிகளுக்குமடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு கல்வி துறையில் முன்னேற வேண்டும்என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு 28ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத. 10 11 12வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு 5 ஆயிரம் 313கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மேல்நிலைபள்ளிக்கு மட்டும் ரூ.7லட்சத்தில் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு கொடுத்துள்ளோம். அதனால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஆழ்துளை கிணறு மற்றும் “சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்யப்படும்.
2002ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது ஜெயலலிதா அரசில் தான்.இதுபோல்எப்போது எல்லாம் அதிமுக அரசு நடக்கிறதோ அப்போதெல்லாம் கல்வி வளர்ச்சி முன்னுரிமை அளிப்போம் என்றார்.

இந்த ‘நிகழ்ச்சியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சசிகுமார்,தாமோதரன். அதிமுக நகர செயலாளர் ஏ.ஜி. ரவீசந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டிடி. சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.