காஞ்சிபுரம், ஜூலை 30: 30ம் நாள் இன்று ஆதி அத்திவரதர் நீல வான நிற பட்டாடையில், மல்லிகை, செண்பகம் மற்றும் பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சூடப்பட்டு, முத்து மணி கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.

இன்று 30-ம் நாள் வைபவத்தில் எம்பெருமான் நீல வான வண்ண பட்டு உடுத்தி மல்லிகை மலர்களால் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்னும் இரு தினங்களே சயன கோலத்தில் உள்ள எம்பெருமானை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் நாளை பொது தரிசன வரிசையில் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் ஊள்ளிருக்கும் பக்தர்கள் 5 மணி வரை சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் தரிசனங்கள் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும்,
நாளை மறுதினம் சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெறுவதால் இந்த தடை செயல்படுத்த உள்ளதாகவும் மீண்டும் வழக்கம்போல் 1-ம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கம் போல் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பெருமாளை எழுப்பும் வைபவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர். ஆதி அத்திவரதருக்கு நீல வான நிற பட்டாடை அணிவிக்கப்பட்டு, அவரது கழுத்தில் மல்லிகை, சம்பங்கி வெட்டி வேர் மற்றும் செண்பகம் உள்ளிட்ட பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகள் அணிவிக்கப் பட்டும் முத்து மணி கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை பக்கதர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.