திருநெல்வேலி, ஜூலை 30:  டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணியில், கேப்டன் அனிருதா தவிர மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். கேப்டன் அனிருதா மட்டும் தனிஒருவனாக நின்று 59 பந்துகளில் 98 ரன்களை குவித்து அசத்தினார். அதன்மூலம், அந்த அணி 7 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி ஒரு விக்கெட்டுகளை கூட விட்டுக்கொடுக்காமல் 17 ஓவர்களிலேயே (161) இலக்கை கடந்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  56 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய ஹரி நிஷாந்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.