சூப்பர் ஸ்டார் வெளியிட்ட பஸ்ட் லுக் போஸ்ட்டர்

சினிமா

பார்த்த விழி பார்த்தபடி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இப்படத்தை இயக்குனர் சேது இயாள் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையும் பாடியுள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மைய கருவாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.