சென்னை, ஜூலை 31: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவமனை தினத்தில் ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்களை கௌரவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவமனை தின விழாவில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மரக்கன்று நட்டு, மூலிகை தோட்டம், மருத்துவமனை சேவைகள் பற்றிய கண்காட்சியை பார்வையிட்டு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்களை கௌரவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907ஆம் ஆண்டு மருத்துவம் பயின்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை துவங்க காரணமாக இருந்தவரும் பல்வேறு சமுகப் பணிகளை செய்தும் தமிழ்நாடு சட்ட மன்றத்தின் முதல் பெண் உறுப்பின ராகவும் இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜுலை 30ம்தேதி மருத்துவ தினமாக கொண்டா டப்படுகிறது.

இத்தினம் மருத்துவமனை பணியா ளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் மருத்துவ மனையின் ஆண்டு விழாவாகவும் கொண்டாட மருத்துவமனை தினக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகள், உயிர்காக்கும் சிகிச்சை முறைகள், மருத்துவ மனையின் செயல்பாடுகள் குறித்து நிகழ்ச்சி நடத்துதல் போன்றவை மூலம் பொதுமக்களின் பங் களிப்பை ஊக்குவித்து மருத்துவ மனை மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒரு பாலமாக அமைய இம்மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் நலத்துறை செயலாளர் மரு. பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. செந்தில்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.