‘குருக்ஷேத்ரம்’ படத்தில் பாஞ்சாலியாக ஸ்நேகா

சினிமா

மஹாபாரத குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்‘. உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி உள்ள இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜுன் சார்ஜா, கிருஷ்ணனாக வி. ரவிச்சந்தர், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவி ஷங்கர், சையியாக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதியாக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஐய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர். முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.