ஆசிரியர்களுக்கு பயிலரங்கம் கிரியா பல்கலை. நடத்தியது

சென்னை

சென்னை, ஆகஸ்ட் 1:கிரியா பல்கலைக்கழகத்தின் எழுத்தியல் மற்றும் கற்பிக்கும் கலைக்கான மையம் சார்பில் சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்காக அதன் முதல் தொடக்க நிகழ்வு பயிலரங்கம் நடைபெற்றது. இம்மையத்தின் இயக்குனரான டாக்டர் அனன் தாஸ்குப்தா இப்பயிலரங்கை நடத்தினார்.

ஆழமான நுண்ணாய்வுடன் வாசித்தலையும் மற்றும் எழுதுதலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பயன்படுத்தப்படும் கற்பிக்கும் கலைக்குரிய வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்து புரியுமாறு செய்வதே இந்த பயிலரங்கின் பிரதான நோக்கமாக இருந்தது.

வகுப்பறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் வகுப்புகளில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் இருக்கின்ற பிரச்சனைகள், சவால்கள் குறித்து கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும். இந்நிகழ்வு நடைபெற்ற நாளில் நல்ல மழை பெய்த போதிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல், 22 ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர;.
அறிவியல், தத்துவவியல், ஆங்கிலம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வததோடு இதில் பங்கேற்றனர்.

வரிவடிவம், ஒளிவடிவம் மற்றும் உணர்வு என்ற மூன்று கருப்பொருட்களின் மீது கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெறும் வகையில் இந்த பயிலரங்கானது கட்டமைக்கப்பட்டிருந்தது. எழுத்துவடிவ வார்த்தையாக, உச்சரிக்கும் ஒலியாக அர்த்தத்தை கண்டறிய அனுமதிக்கின்ற ஒரு அமைப்பாக ஒரு மொழியின் பல்வேறு அம்சங்கள் இந்த அமர்வுகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

ஒரு பத்தியிலிருந்து வாக்கியங்களை ஒவ்வொரு பங்கேற்பாளரும் சத்தமாக வாசிப்பது, பிற பங்கேற்பாளர்களோடு அதன் அர்த்தத்தை விவாதிப்பது மற்றும் இறுதியாக அந்த விவாதப்பொருள் குறித்து ஒரு பகுப்பாய்வையும், சுருக்கத்தொகுப்பையும் எழுதுவது ஆகியவை உட்பட்ட செய்முறை பயிற்சிகள் அமைந்ததாக ஒவ்வொரு அமர்வும் உருவாக்கப்பட்டிருந்தது.