திருத்தணி, ஆக.1: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அம்மையாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சரவணன்(வயது 28) என்பவர் சர்வேயராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ்(வயது 40) அவருக்கு சொந்தமான நிலத்தை சப் டிவிசன் செய்து தர கோரி விண்னப்பித்திருந்தார். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சர்வேயர் சரவணனை சந்தித்து சப் டிவிஷன் செய்ய கேட்டதற்கு ரூ. 2500 லஞ்சம் கேட்டதாக சர்வேயர் கூறப்படுகின்றது.

பணம் வழங்க விரும்பாத ராஜேஷ் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது வயலுக்கு வந்த சர்வேயரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்து சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார்கையும் களவுமாக பிடித்தனர்