சென்னை, ஆக, 1 : சென்னையில் எம்கேபி நகரில் இன்று 30 கிலோ மாவா போதை பொருளை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாகவி பாரதி நகரில இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக அங்கு சோதனை நடத்தியதில் 30 கிலோ மாவா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.