மும்பை, ஏப்.11: 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்த வரையில், அணியின் வெற்றியை தனி ஒருவரின் இன்னிங்ஸ் மாற்றக்கூடும் என்பதற்கு நேற்றைய ஆட்டம் மிக சிறந்த உதாரணம்.

198 ரன்கள் இலக்கு இருக்க, 12 ஓவர்களுக்கு பிறகும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தால், மும்பை அணி தோற்றது போலதான் இருந்தது.

ஆனால், இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய மும்பை வீரர் கிரோன் பொல்லார்டு, 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், பத்து சிக்ஸர்கள் என இருந்த இடத்தில் இருந்து மட்டுமே 72 ரன்களை விளாசி மிரளவைத்தார்.

இதேபோல், பஞ்சாப்பின் வெற்றி வாய்ப்பை கடைசி பந்தில் தட்டித்தூக்கினார், மற்றொரு வீரர் ஜோசப்.
இவர்கள் போக, கிறிஸ் கெயில் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரவைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே, உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸின் ஆதிக்கம் இருக்கும் என்பது நிபுணர்களின் கணிப்பு.