ஆம்பூர், ஆக. 2: தேர்தல் கால விதிமுறைகளை மீறி ஆம்பூரில் தனியார் மண்டபம் ஒன்றில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5-ம் தேதி வாக்குப்பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இதனிடையே மு.க.ஸ்டாலின் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் அனுமதியின்றி ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.