புதுடெல்லி, ஆக.2: தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் தவறாமல் கட்டாயம் வாக்களிக்கச் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியது. இதுதொடர்பாக மனுதாரர் மத்திய தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.