சவுதி அரேபியா பெண்களுக்கு கட்டுப்பாடு தளர்வு

உலகம்

ரியாத், ஆக.2: கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அவை தளர்த்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான பல கட்டுப்பாடுகளை தளர்த்திய அந்நாட்டு அரசு தற்போது, பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைதான் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்காக 21 வயதைக் கடந்த பெண்கள் முறைப்படி விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.