தங்கம் விலை சவரன் ரூ. 27 ஆயிரத்தை தொட்டது

சென்னை

சென்னை, ஆக. 2: தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ. 26 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 496 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 26 ஆயிரத்து 976-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 62 உயர்ந்து ரூ. 3,372 ஆக உள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்காவில் மத்திய வங்கியில் 0.25 சதவீத வட்டி வகிதம் குறைந்துள்ளது காரணமாக கருதப்படுகிறது.
மேலும் ஜூலையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது தான் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 300-க்கும், ஒரு கிராம் ரூ. 44.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.