சென்னை, ஆக.2:விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி சைதாப்பேட்டையில் இன்று காலையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தியப்பிறகு போராட்டத்தை கைவிட்டனர். சைதை தாடண்டன் நகரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது.

இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி, தரமான உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என கூறி முறையீடு செய்தனர். இன்று காலை திடீரென சைதை பிரதான சாலைக்கு வந்து மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சைதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். இதன்பிறகு மாணவர்கள் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.