சென்னை, ஆக.3: தென்னக ரெயில்வே சீசன் டிக்கட் பயண தூரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பயணிகளின் வேண்டுகோளை ஏற்று 10 கி.மீ தூரம் அதிகரிக்கப்பட்டு, 160 கி.மீட்டராக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தினமும் வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரெயில்களில் சீசன் டிக்கெட் பயணிகளுக்கான அதிகபட்ச தூரம் 150 கி.மீ.ட்டராக இருந்தது. ரெயில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் அதனை 10 கிலோ மீட்டர் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

தென்னக ரெயில்வேயின் இந்த அறிவிப்பால், அரக்கோணம், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உட்பட வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பயணிகள் பலனடைவார்கள்.

இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மேல் ஆளத்தூர் வரையும், சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா, சென்ட்ரல் வழியாக குடியாத்தம் வரையிலும் சீசன் டிக்கட் வழங்கப்படும்.