ஏடன், ஆக.3: ஏமன் நாட்டில் அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். தெற்கு ஏமன் நாட்டின் அபியான் மாகாணத்தில் உள்ள அல்மஹ்ஃபத் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஏமனைச் சேர்ந்த அல்-கொய்தா அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஏடனில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது