சென்னை, ஆக.3: ஈரோடு மாவட்டம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 20). இவர், சென்னையில் தங்கி, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து கோட்டூர்புரம் ரெயில்வே நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார்.

அப்போது பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமி ஒருவர், கஸ்தூரியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். அங்குள்ள ரோந்து பணியில் இருந்த போலீசார் இதை கவனித்து துரத்தவே, செல்போனை கீழே போட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.