எலி பேஸ்ட்டினால் பல்துலக்கிய மாணவிக்கு சிகிச்சை

சென்னை

சென்னை, ஆக.3: மதுரையை சேர்ந்தவர் 22 வயதான ரங்கமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்துவருகிறார். அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கிவருகிறார். இவருக்கு இரவு பல்துலக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, நேற்றிரவு 8 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இவர் பல் துலக்கிக்கொண்டிருந்துள்ளார். பின்னர், சிறிது நேரத்திலேயே மின் தடை சரியானதும்தான், ரங்கமணி மயங்கிவிழுந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சக விடுதி மாணவிகள் ரங்கமணியை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பற்பசைக்கு பதிலாக, தவறுதலாக எலி பிடிக்க பயன்படும் பேஸ்ட் கொண்டு ரங்கமணி பல் துலக்கியுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவர, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.