சென்னை, ஆக.4: டிவ்வாஸ் அமைப்பானது, நீரிழிவு நோயிலிருந்து விடுபடுங்கள் என்ற உறுதிமொழி மற்றும் ஈடுபாட்டுடன்கூடிய ஒருங்கிணைந்த நிகழ்ச்சியினை, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தியது.

நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவது குறித்து டிவ்வாஸ் அமைப்பின் மூலமாக அறிந்து கொண்டனர். டிவாஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் உஷா ஸ்ரீராம் நீரிழிவு நோயால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விவரித்தார்.

பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையின் அவசியத்தை இந்நிகழ்ச்சி உறுதி செய்வதாக அமைந்தது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், டிவ்வாஸ் அமைப்பானது, நீரிழிவு நோயினை தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை பல்வேறு பொழுதுபோக்குநிகழ்ச்சிகள் மூலமாக எடுத்துரைத்தது. ‘

நோக்கத்தோடு கூடிய மாலை” என்ற தலைப்போடு மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நீரிழிவு நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.