வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: 20 பேர் பலி

உலகம்

எல் பேசோ, ஆக.4: அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

எல் பேஸோ என்ற நகரில் அமைந்த வணிக வளாகம் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்து உள்ளனர். பேட்ரிக் கிரஸ்சியஸ் (வயது 21) என்ற நபர் இந்த துப்பு£க்கி சூட்டை நடத்தி உள்ளார். மேலும் சந்தேகத்திற்குரிய 3 நபர்களை கைது செய்திருக்கிறோம் என்று நகரத்தின் மேயர் டீ மார்கோ கூறியுள்ளார்.