வேலூர்,ஆக.4: வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக எம்பி கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்பதற்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்றோடு முடிந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் இந்த பிரச்சாரம் முழுக்க திமுக சார்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், எம்பியுமான கனிமொழி பிரச்சாரம் செய்யவே இல்லை.

வேலூர் தொகுதி பக்கமே அவர் செல்லவில்லை. இதனால் திமுகவில் கனிமொழி புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இது ஏன் என்று தற்போது வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

அதில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கனிமொழியால் பரப்புரைக்கு வரமுடியவில்லை. பரப்புரையில் பங்கேற்காவிடினும் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வருகை தந்த கதிர் ஆனந்த் இன்று அத்திவரதரை தரிசனம் செய்தார்