முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

சென்னை

சென்னை, ஆக. 4: முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி எஸ்.என். ஷமினா ஸ்ரீ. சென்னை ரெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய துணை இளநிலை பேட்மிண்ட்டன் போட்டியில் கலந்து கொண்டு 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடி முதல் பரிசினை வென்று சாதனை படைத்தார்.

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் 500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவியின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.