வேலூர், ஆக.5:  வேலூர் மக்களவை தேர்தலில் இரண்டு முதல் மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வள்ளலார் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை இன்று பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. நூறு சதவிகித வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நான் இரண்டு முதல் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.