ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. 90-களில் இருந்த மாணவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த டிரைலர் இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

குறிப்பாக டிரைலரின் கடைசியில் வரும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கின்டலடிக்கும் விதத்தில் அமைந்த, நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வசனத்திற்கு பாராட்டுகளை விட எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.

இந்த வசனத்திற்கு கோமாளி படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில் இந்த டிரைலரை பார்த்த ரஜினியின் நீண்ட நாள் நண்பர் நடிகர் கமலஹாசன் அந்த வசனத்திற்காக உடனே கோமாளி படத்தின் தயாரிபாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என கூறி வருத்தப்பட்டாராம்.
அதேபோல் ரஜினி ரசிகர்களும் கொதிப்படைந்து கோமாளி படக்குழுவினருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.