சிதம்பரம், ஆக. 5: 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). அதிமுக பிரமுகரான இவர் , அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி உள்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுமி தற்போது 5மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சிறுமியை அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு இச்சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த திருமுருகன் பற்றி சேத்தியாத் தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் மகளிர் போலீசார் இரண்டு பேரையும் அழைத்து விசாரணை நடத்தி திருமணம் செய்து 5 மாதம் கர்ப்பிணியாக்கிய திருமுருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.