டேராடூன், ஆக.6:  உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் மலைப்பாதையில் 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் ஏழு பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்ததும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.