சென்னை, ஆக 6: சென்னை அடுத்த போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் வயது 23 இவர் போரூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடி மாதத் திருவிழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு செல்லும்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்,
உடனடியாக இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இவரை பிடித்து தர்மஅடி கொடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பல்லாவரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கணேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.