செங்குன்றம், ஆக.7: செங்குன்றம் அருகே உள்ள செண்ட்ரம்பாக்கம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). இவரது வீட்டில் நுழைந்த மர்மநபர், தனியாக இருந்த ராஜசேகரின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளான். இது குறித்த புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து துணிகர கொள்ளையனை தேடிவருகின்றனர்.