சென்னை, ஆக.7: சென்னை சூளைமேட்டில் கட்டுமான பணி ஒன்று நடந்து வருகிறது. இதில், சூளைமேட்டை சேர்ந்த அசோக் (வயது 20). சூளைமேடு வெங்கடாச்சலம் தெருவை அஷரப் (வயது 23) ஆகியோர் இங்கேயே ஒரு சிறிய அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்துவந்துள்ளனர்.

திறந்தநிலையில் இருந்த இந்த அறையில், இரு மர்மநபர்கள் இன்று அதிகாலை திடீரென உள்ளே நுழைந்து அங்கிருந்த 2 செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர். இதைபார்த்த அசோக் அதிர்ச்சியடைந்து அவர்களை துரத்த, டி.கே. மூர்த்தி தெரு வழியாக தப்பியோடிய அவர்களை, அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். சூளையை சேர்ந்த நாகராஜ் (வயது 22), பட்டாளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 20) என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களை பெரியமேடு போலீசார் கைது செய்து, 6 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.