இன்டர்நெட்டில் அஜித் பட காட்சி லீக்கானது

சினிமா

சென்னை, ஆக.7: அஜித் நடிப்பில் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் காட்சிகள் இன்டர்நெட்டில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் வித்யாபாலன், ஸ்ரத்தா கபூர், பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச் வினோத் இயக்கி உள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன. குறிப்பாக அஜித் தோன்றும் காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்டெர்நெட்டில் உள்ள அந்த காட்சிகளை உடனடியாக நீக்குவதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியிட நேற்று தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.