காபூல், ஆக.8: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.