இஸ்லாமாபாத், ஆக.8: இந்தியாவுடனான தூதரக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான், தற்போது தனது வான்வழி பாதையை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்றும், இதில் பாகிஸ்தான் தலையிடும் முயற்சி வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது, இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளுதல், இந்திய தூதரை திருப்பி அனுப்புதல் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி வரை பாகிஸ்தான் வான்வழி பாதையை மூட விடவும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இந்தக் கமிட்டியில் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ‘காஷ்மீரிகளுடன் ஒற்றுமை பாராட்டும் நாள்’ என்று அனுசரிக்கவும், இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்திய நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2001-ல் தாக்குதல் நடத்திய போது இரு நாடுகள் இடையே தூதரக உறவு முறிந்தது. அப்போதைய பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஜகாங்கீர் காசி டெல்லியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, காஷ்மீர் விவகாரம் இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனை என்றும், இதில் தலையிடும் பாகிஸ்தானின் முயற்சி வெற்றி பெறாது என்றும்