சென்னை, ஆக.8:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11-ம் தேதி சென்னை வருகிறார். உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு அமித்ஷா தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவருடைய வருகை பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு எழுதி உள்ள நூலை சென்னையில் நடைபெறும் விழாவில் அமித்ஷா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இதற்காகவே அவர் சென்னை வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருடைய வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. காஷ்மீர் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு அவர் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.