சிவா இயக்கத்தில் கிராமத்து கதையில் ரஜினி

சினிமா

அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகியப் படங்களை இயக்கிய சிவா தமிழ் சினிமாவின் முக்கியமானக் கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா, நடிப்பதாக இருந்த நிலையில் ரஜினி சிறுத்தை சிவாவோடு சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியது. அடுத்த சில மாதங்களில் அது உறுதியானது.

ரஜினி இப்போது தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது முடிந்ததும் உடனடியாக சிவா படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ரஜினிக்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் சிவா இறங்கியுள்ளார். வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகியப் படங்களின் மூலம் அஜித்துக்கு கிராமியப் பின்னணிக் கொண்ட கமர்சியல் கதையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாக்கியவர் சிவா. ரஜினியும் கடைசியாக முத்து, எஜமான், அருணாச்சலம் ஆகியப் படங்களில்தான் கடைசியாக கிராமத்துப் பின்னணியில் நடித்தார். அதன் பின் அதுமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. அதனால் கிராமத்துப் பின்னணியில் கதை அமைக்கும்படி சிவாவிடம் கூறியதால் ரஜினிக்காக கதையும் கிராமியப் பின்னணியில் உருவாகி வருகிறது.