மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கம்

சினிமா

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து மாநாடு படத்தை தயாரிப்பதாக சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். ஆனால் அறிவிப்பு வந்ததோடு சரி அதன்பிறகு எந்தவிதப்பணிகளும் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.