புதுடெல்லி, ஆக.9: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனாலும் தமிழக நிலவரம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழக கவர்னர் சந்தித்து பேசினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். அதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின் போது அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.