கொச்சி, ஆக.9: கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் கொச்சி விமான நிலையம் இன்று முதல் ஞாயிறு வரை மூடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது மட்டுமின்றி கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் 11-ம் தேதி வரை கொச்சியிலிருந்து செல்லும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.