சென்னை, ஆக.9: திருவான்மியூர் அருகே கோயில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் அவ்வை நகரில் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி இங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.25000 பணம் கொள்ளைப்போனது.

இது குறித்த புகாரின்பேரில், திருவான்மியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை நடத்திவந்த நிலையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரதீப் (வயது 23), ஜாபர் நிக்கான் (வயது 22) ஆகிய இருவரை கைது செய்தனர்.