ஜோஹன்னஸ்பர்க், ஆக.9: தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர் ஹசிம் ஆம்லா (வயது 36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 18,672 ரன்களை எடுத்துள்ளார்.

இதில், 55 சதங்கள், 88 அரைசதங்கள் அடங்கும். மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000, 3000, 4000, 5000, 6000, 7000 ஆகிய ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் ஹசிம் ஆம்லா நிகழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத கேப்டனாக விளங்கிய பெருமைக்குரிய ஹசிம் ஆம்லா, 2014 முதல் 2016 டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 27 சதங்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கையாகும்.