சியோல், ஆக.10: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா அடையாளம் காண முடியாத இரு ஏவுகணைகளை இன்று மீண்டும் கடலில் செலுத்தி சோதித்து பார்த்ததாக தென்கொரியாவைச் சேர்ந்த ஏவுகணை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் வடகிழக்கு நகரமான ஹம்ஹங் நகரில் இருந்து ஜப்பான் கடல் என்று அறியப்படும் கிழக்கு கடலில் ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தப்பட்டதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.